பீகார் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- காங்கிரஸ் ஆதரித்தது! நிதிஷ்குமார் அரசு வென்றது!

17 ஆண்டு கால பாஜக கூட்டணியை நிதீஷ் குமார் முறித்துவிட்டு வெளியேறிய கையோடு தமக்கு பெரும்பான்மை இருக்கிறது..சட்டசபையில் நிரூபிப்பேன் என்றார். ஆனால் பாஜகவோ நிதீஷ்குமார் அரசே ராஜினாமா செய்! என்று கோரி வருகிறது.
பீகார் சட்டசபையில் பெரும்பான்மைக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. நிதீஷ்குமாருக்கு 118 எம்.ல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 4 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இ.கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1 எம்.எல்.ஏ உள்ளார். பீகார் சட்டசபையில் 6 பேர் சுயேட்சைகள்.
இந்நிலையில் இன்று காலை சட்டசபை கூடிய போது நம்பிக்கை வாக்கு கோரும் ஒருவரித் தீர்மானத்தை முதல்வர் நிதீஷ்குமார் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள் நிதீஷ்குமாருக்குக் கடும் கண்டனம் குஜராத் முதல்வர் மோடிக்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர். இத்தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில் பெரும்பான்மைக்காக குழப்பம் ஏற்படுத்துகிறார் நிதீஷ்குமார் என்று குற்றம்சாட்டி பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துவிட்டனர்.
இதன் பின்னர் விவாத முடிவில் மிக நீண்ட உரையாற்றினார் நிதீஷ்குமார். பின்னர் நிதீஷ்குமார் அரசுக்கு ஆதரவு தெரிவிப்போர் எழுந்து நிற்குமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டார். அவர்கள் ஒவ்வொருவராக எண்ணப்பட்டு முடிவில் நிதீஷ்குமார் அரசு வென்றதாக அறிவிக்கப்பட்டது.
118 எம்.எல்.ஏக்களைக் கொண்ட நிதீஷ்குமார் அரசுக்கு வெற்றி பெற 122 எம்.எல்.ஏக்கள் தேவை. 4 எம்.எல்.ஏக்கள் கொண்ட காங்கிரஸ்,1 எம்.எல்.ஏ கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் 3 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஆதரித்தனர். இதனால் வெற்றிக்கான அவர்களிடமிருந்த 118 உறுப்பினர்கள் மற்றும் கூடுதலாக 6 பேரின் ஆதரவைப் பெற்று நிதீஷ் குமார் அரசு வெற்றி பெற்றது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications