வெள்ளம்..பேரழிவு..உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு!
டேராடூன்: பெருமழை மற்றும் வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிவாரண நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.
உத்தர்காண்ட் மாநிலமே வெள்ளக்காடாகி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். புனித யாத்திரை தலங்கள் அதிகம் இருக்கும் பகுதி என்பதால் நாடு முழுவதும் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கானோர் ஆங்காங்கே மலைப் பகுதிகளில் தவியாய் தவித்து வருகின்றனர். இம்மாநிலத்தின் புனித தலமான கேதர்நாத் முற்றிலும் நிலைகுலைந்து போய்கிடக்கிறது.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் டேராடூனில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி வழங்கப்படும். முதல் கட்டமாக ரூ145 உடனடியாக வழங்கப்படும் என்றார். மேலும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ2 லட்சமும் படுகாயமடைந்தோருக்கு ரூ50 ஆயிரம் நிவாரண உதவியும் வழங்கப்படும் என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications