அட, களவாணிப் பயலுகளா.. மணப்பெண்ணோட கல் வளையலைக் கூட விடலையாடா நீங்க!
அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கல்யாண மண்டபத்துக்குள் புகுந்த சில களவாணிப் பயல்கள், அங்கு மணப்பெண் அறையில் இருந்த மணப்பெண்ணின் நகைகளை ஒட்டுமொத்தமாக திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த ஹேமா என்ற பெண்ணுக்கும், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த உதயக்குமாருக்கும் திருமணம் நிச்சயமானது. இன்று திருமணம் அறந்தாங்கியில் நடப்பதாக இருந்தது.
நேற்று இரவு நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் பெரும் திரளான உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். நிச்சயதார்த்தம் முடிந்து, விருந்து முடிந்து உறவினர்கள் கிளம்பிச் சென்றனர். மணப்பெண் வீட்டார் மண்டபத்திலேயே தங்கினர்.
இந்த நிலையில், மணப்பெண் ஹேமாவின் அண்ணி நளினி மணப்பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் தனது மகனுடன் தங்கியிருந்தார். அந்த அறையில் திருமணத்திற்கான நகைககள் 3 சூட்கேசுகளில் வைக்கப்பட்டிருந்தன.
நள்ளிரவில் திடீரென்று எழுந்த நளினியின் மகன் தன்னை ஏ.சி. அறையில் தூங்க வைக்குமாறு கேட்டு அழுதுள்ளான். உடனே தனது மகனை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த ஏ.சி. அறைக்கு சென்று தனது மகனை படுக்கவைத்துவிட்டு மீண்டும் தான் தங்கியிருந்த அறைக்கு திரும்பினார்.
அப்போது அந்த அறையின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த 3 சூட்கேசுகளும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. அதில் இருந்த 45 பவுன் நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு நளினி பெரும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த அறையில் இருந்த 15 ஆயிரம் ரொக்க பணம், 3 செல்போன்களும் கொள்ளை போயிருந்தது.
5 பவுன் ஆரம், 5.5 பவுன் ஆரம், 7.5 பவுன் நெக்லஸ், 4 பவுன் கல் நெக்லஸ், 2 பவுன் செயின், 5 பவுன் கல் வளையல்கள் 2 செட், 4 பவுன் டாலர் செயின், 3.5 பவுன் கல் வைத்த ஜிமிக்கி 2 செட் உள்ளிட்ட 45 பவுன் நகைகள் திருட்டுப் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications