நிலக்கரி ஊழல்: முன்னாள் செயலாளர் ஹெச். சி. குப்தாவிடம் சிபிஐ விசாரணை

2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்தது குறித்து சிபிஐ 13 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த காலகட்டத்தில் 151 நிறுவனங்களுக்கு 68 நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டன. இது குறித்த சில ஆவணங்கள் நிலக்கரித்துறை அமைச்சகத்தில் இருந்து மாயமாகின.
இந்த ஊழல் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர்கள் சந்தோஷ் பக்ரோடியா, தாசரி நாராயண ராவ், காங்கிரஸ் எம்.பி. விஜய் தார்தா ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்நிலையில் நிலக்கரி சுரங்க ஊழல் நடந்தபோது நிலக்கரித்துறை செயலாளராக இருந்த ஹெச்.சி. குப்தாவிடம் விசாரணை நடத்த மத்திய அரசிடம் சிபிஐ அனுமதி கேட்டது. ஆனால் மத்திய அரசோ குப்தா இந்திய வர்த்தகப் போட்டி ஆணையத்தின் உறுப்பினராக இருப்பதால் அவரை விசாரிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டது.
ஆனால் இது குறித்து உச்ச நீதிமன்றத்தை அணுக சிபிஐ முடிவு செய்ததையடுத்து குப்தாவை விசாரிக்க மத்திய அரசு கடந்த 11ம் தேதி அனுமதி அளித்தது. முன்னதாக கடந்த 10ம் தேதி குப்தா போட்டி ஆணையத்தின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் நிலக்கரி ஊழல் தொடர்பாக குப்தாவிடம் விசாரணை நடத்தினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications