குற்றாலம் அருவித் தடாகத்தில் மூழ்கி மதுரையைச் சேர்ந்த 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்: குற்றாலம் மெயின் அருவியில் உள்ள தடாகப் பகுதியில் விழுந்து மதுரையைச் சேர்ந்து 2 பேர் பலியானார்கள்.
மதுரை, அம்மாபட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. 60 வயதான இவர் நேற்று நள்ளிரவில் அருவிக்குக் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது தவறி, முன்புறம் உள்ள தடாகத்தில் விழுந்து விட்டார். அதில் நீரில் மூழ்கி அவர் பலியானார்.
அதேபோல மதுரையைச் சேர்ந்த 23 வயதான மருத்துவப் பிரதிநிதியான ஜவஹர் என்பவர் இன்று அதிகாலை 2 மணியளவில் அருவியில் குளித்த போது மூச்சுத் திணறி தடாகத்தில் விழுந்து உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications