திமுக மகளிர் தொண்டர் அணி செயலாளர் காரல் மார்க்ஸ் கைது.. குஷ்புவை முன்பு திட்டியவர்
தஞ்சாவூர்: திமுக மகளிர் தொண்டர் அணி மாநிலச் செயலாளர் காரல் மார்க்ஸ் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முன்பு நடிகை குஷ்புவைத் திட்டியவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் காரல் மார்க்ஸ். 63 வயதான இவர் மாநில மகளிர் தொண்டர் அணிச் செயலாளராக இருக்கிறார்.
சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமைக் கழக பேச்சாளர்கள் கூட்டம் நடந்தது. அப்போது காரல் மார்க்ஸ் முதல்வர் ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்துப் பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த கோர்ட், காரல் மார்க்ஸை கைது செய்ய உத்தரவிட்டது.
அதன்படி தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் காரல் மார்க்ஸை தஞ்சை சென்று கைது செய்தனர்.
முன்பு மு.க.ஸ்டாலின் குறித்து நடிகை குஷ்பு கொடுத்த பேட்டியால் திமுகவில் பெரும் பிரளயம் ஏற்பட்டது. அப்போது குஷ்புவை நேருக்கு நேராக காரல்மார்க்ஸ் திட்டினார் என்று பரபரப்பு ஏற்பட்டது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் அவர் முதல்வரை அவதூறாகப் பேசிய வழக்கில் கைதாகியுள்ளார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த்












Click it and Unblock the Notifications