Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனைவியின் சடலத்தோடு ஊர் சுற்றிய கணவர் : நடத்தை சரியில்லாததால் கொன்றதாக வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: மனைவியின் நடத்தையில் ஆத்திரமடைந்த கணவன் அவளைக் கொன்று, சடலத்துடன் காரில் சென்ற போது போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் காமாட்சி பாளையத்தை சேர்ந்த சீனிவாஸ், சொந்தமாக லாரி வைத்து அதனை வாடகைக்கு விட்டு வருமானம் பார்த்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

மனைவியின் நடத்தையை கண்டித்து வந்த சீனிவாஸ், ஒரு கட்டத்தில் கோபத்தில் அவரைக் கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, டீயில் மயக்க மருந்து கொடுத்து மனைவி பிரேமாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். சடலத்தை என்ன செவது எனத் தெரியாமல், காரில் முன் சீட்டில் பிரேமாவின் சடலத்தை வைத்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு முதல் ஓசூர், சூளகிரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் சுற்றிதிரிந்துள்ளார்.

நேற்று கிருஷ்ணகிரி-தர்மபுரி நான்கு வழிச்சாலையில் சீனிவாஸின் கார் வந்த போது, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசோமராஜ். எஸ்.ஐ. ராமசாமி, ஆகியோர் அந்த காரை சந்தேகத்தின் பேரில் வழி மறிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், பயத்தில் காரை சீனிவாஸ் நிறுத்தவில்லை.

இதையடுத்து போலீசார் விரட்டிச்சென்று காரை மடக்கிப் பிடித்தனர். காரில் பிரேமாவின் பிணத்தைக் கண்டு அதிர்ந்த போலீசார் சீனிவாஸை கைது செய்தனர்.

போலீசில் சீனிவாசன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்ப தாவது:-

நான் சொந்தமாக லாரி தொழில் செய்வதால் அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவேன். அப்போது எனது மனைவி பிரேமா, எனது நண்பர்கள் மற்றும் பலருடன் கள்ளத்தொடர்பு வைத்து உல்லாசமாக இருந்து வந்தார். அதில் சிலர் வெளியூர்களுக்கு அழைத்து சென்று விடுதி அறைகளில் தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதை உறவினர்கள் மூலம் அறிந்த நான், பிரேமாவை கண்டித்தேன். ஆனால் அவர் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி கடந்த 18-ந் தேதி பிரேமாவை அழைத்துக் கொண்ட ஓசூர் வந்து லாட்ஜில் அறை எடுத்து தங்கினேன்.

நேற்று முன்தினம் இரவு ஓசூரில் ஒரு சாலையோர ஓட்டலுக்கு பிரேமாவை அழைத்து சென்றேன். அங்கு பிரேமாவுக்கு தெரியாமல் டீயில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தேன். டீயை குடித்ததும் மயங்கிய பிரேமாவை காரில் ஏற்றிக்கொண்டு ஓசூர் அருகே உள்ள சிப்காட்டிற்கு சென்றேன்.

அங்கு காரில் மயங்கி கிடந்த பிரேமாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். காரில் முன் சீட்டில் பிரேமாவின் பிணத்தை வைத்துக் கொண்டு நேற்று முன்திம் இரவு முதல் சுற்றினேன். நேற்று காலை தர்மபுரி, தொப்பூர் கனவாய் பகுதியில் பிரேமாவின் பிணத்தை போது போலீசில் சிக்கி கொண்டேன் ‘ என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+