உருக்குலைந்து கிடக்கும் உத்தர்காண்ட்... எங்கே போனார் ராகுல் காந்தி? வலைதளங்களில் சர்ச்சை...!
டெல்லி: உத்தர்காண்ட் மாநிலத்தை உருக்குலைத்துப் போட்டிருக்கிறது வெள்ளம்...இமயமலை யாத்திரை இனி 3 ஆண்டுகாலத்துக்கு வாய்ப்பே இல்லை என்கிற அளவுக்கு அம்மாநிலம் உருக்குலைந்து கிடக்கிறது.
உத்தர்காண்ட் மாநில வெள்ளத்துக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 550ஐ தாண்டிவிட்டது. இன்னும் எத்தனை ஆயிரம் பேரை வெள்ளம் பலி கொண்டிருக்கிறதோ? என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. உத்தர்காண்ட் வெள்ளப்பகுதிகளை பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் பார்வையிட்டனர்.

குஜராத், ராஜஸ்தான் என பல மாநிலங்கள் ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றன. ஒவ்வொரு மாநிலமும் நிவாரண உதவிகளை, நிவாரணப் பணிகளுக்காக அதிகாரிகளையும் வாகனங்களையும் கொடுத்து வருகின்றன. ஆனால் இவ்வளவு பெரிய பேரிடம் குறித்து காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிற ராகுல் காந்தி ஏன் வாய்மூடி மவுனியாக இருக்கிறார்? என்பதுதான் சமூக வலைதளங்களில் வறுக்கப்படுகிற விஷயமாக இருந்து வருகிறது.
ஃபேஸ்புக், ட்விட்டர் தளங்களில் இதுதொடர்பாக காரசார விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு லோக்பால் மசோதா, டெல்லி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஆகியவற்றில்யும் ராகுல் காந்தி மவுனமாகவே இருந்ததால் சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications