இமாச்சலப் பிரதேசத்தில் 1200 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு
கின்னார், இமாச்சலப் பிரதேசம்: கன மழை வெள்ளத்தால் இமாச்சலப் பிரதேசதமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கு கிட்டத்தட்ட 1200 சுற்றுலாப் பயணிகள் இன்னும் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பதில் இமாச்சலப் பிரதேச அரசு அக்கறை காட்டவில்லை என்று அவர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
இங்கு இதுவரை வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளனர். கின்னார் மாவட்டத்தில் மட்டும் 1200 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர்.

மின்சாரம் இல்லை - சாலைகள் இல்லை
கின்னார் மாவட்டத்தில்தான் வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரம் சுத்தமாக இல்லை. சாலைகள் அடித்துக் கொண்டு போய் விட்டன.

இதுவரை.ரூ. 1500 கோடி சேதம்
இதுவரை இமாச்சலப் பிரதேசத்தில் மழை வெள்ளத்தால் ரூ. 1500 கோடி அளவுக்கு சோதம் ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மீட்க முடியவில்லை
ஹெலிகாப்டர்கள் மூலம் பெருமளவிலான மக்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணிகள் மந்தம்- பக்தர்கள் குமுறல்
ஆனால் மீட்புப் பணிகள் மகா மந்தமாக நடைபெறுவதாக பாதிக்கப்பட்டோர் குமுறல் வெளியிட்டுள்ளனர். அரசுத் தரப்பில் அசுர கதியில் செயல்படுவதாகத் தெரியவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செல்போன்கள் சுவிட்ச் ஆப்
கின்னார் மாவட்டத்தில் நீர் மின்சார நிலையங்கள் உள்ளன. அவை பெருமளவில் வெள்ளத்தில் சேதமடைந்து விட்டன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் சிக்கலில் உள்ளனர் . செல்போன்களை சார்ஜ் செய்ய முடியவில்லை. இதனால் குடும்பத்தினருடன் பேச முடியாமல் தவிக்கின்றனர்.

எல்லாம் போச்சே.. உள்ளூர் மக்கள் குமுறல்
சுற்றுலாலப் பயணிகள் நிலை இப்படி என்றால் உள்ளூர் மக்கள் தாங்கள் வீடு, வாசல், பொருட்கள் என எல்லாவற்றையும் இழந்து நிற்பதாக குமுறுகின்றனர். எங்கு போவது என்று தெரியாமல் தத்தளிப்பதாக அவர்கள் கண்ணீருடன் கூறுகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications