''மாமனாரின் இன்பவெறி''... அரிவாளை எடுத்து கையை வெட்டித் தள்ளிய மருமகள்கள்!
பாட்னா: தங்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மாமனாரை, 2 பெண்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி கையைத் துண்டித்து விட்டனர்.
பீகார் மாநிலம் ரோத்தாஸ் மாவட்டம், பானாஸ் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த ஊரைச் சேர்ந்தவர் ராதேஷியாம் சிங். இவர் தனது இரு மருமகள்களிடமும் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மாமனாராச்சே என்று அந்த இரு பெண்களும் இதை சகித்துக் கொண்டு பொறுமை காத்து வந்தனர்.
ஆனால் சிங்கின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே ஆவேசமடைந்த இரு பெண்களும், அரிவாளை எடுத்து சரிமாரியாக சிங்கின் கையை வெட்டினர். இதில் இரு கைகளும் கை தனியாக வந்து விட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்தார் சிங்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் சிங்கை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரு மருமகள்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மருமகள்களில் ஒருவர் அளித்த வாக்குமூலத்தில் தினசரி எங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார் எங்களது மாமனார். சில தினங்களுக்கு முன்பு நான் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தபோது பின்னாலிருந்து கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்தார். இதைப் பார்த்து நாங்கள் இருவரும் கூச்சலிட்டோம். ஆனால் அதுகுறித்து அவர் கவலைப்படவில்லை. மாறாக இருவரிடமும் சேட்டை செய்தார். இதனால்தான் கையை வெட்டி விட்டோம் என்றார்.
மருமகள்கள் போட்ட போட்டில் சிங்கின் இரண்டு கைகளும் துண்டாகிப் போய் விட்டன. அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications