சுரேஷை காதலித்து திருமணம் செய்த சுதா... கோவிலுக்குள் நுழைய விடாமல் ஜாதி வெறியர்கள் ரகளை!
தர்மபுரி: தர்மபுரி அருகே ஜாதி விட்டு காதல் திருமணம் செய்த பெண்ணை, கோவிலுக்குள் வரக் கூடாது என்று கூறி ஜாதி வெறியர்கள் ரகளை செய்தனர். இதுகுறித்து அவர் போலீஸில் புகார் கொடுக்கவே போலீஸார் 22 பேரைக் கைது செய்தனர்.
கலப்புத் திருமணங்களை ஏற்க மனம் இல்லாத 'மகா மனிதர்கள்' நாட்டில் நிறையவே உள்ளனர். இவர்களால் பல காதல் மணம் புரிந்த தம்பதிகள் வேதனையில் சிக்குண்டு வாழும் நிலை இன்னும் நீடிக்கிறது.
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள வேப்பமரத்து கொட்டாய் சேர்ந்தவர் சுரேஷ். இவர் வேறு ஜாதியைச் சேர்ந்த சேர்ந்த சுதா என்பவரை காதலித்தார். இரு வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார். தனது ஊரிலேயே வசிக்கத் தொடங்கினார்.
இந்த நிலையில் சுதா அந்த ஊரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடப் போனார். ஆனால் அவர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்று அறிந்த அப்பகுதியினர் சுதாவைக் கோவிலுக்குள் போகக் கூடாது என்று கூறித் தடுத்து ரகளை செய்தனர்.
இதுகுறித்து போலீஸில் புகார் போனது. போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் ஊர் கவுண்டர் என்று கூறப்படும் மாரியப்பன் உள்பட 22 பேரை கைது செய்தனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications