ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ரூ. 47 கோடி கனிமத்தைக் கடத்திய 5 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

5 arrested for stealing in Sterlite firm
தூத்துக்குடி: கோடீஸ்வரர் ஆகும் ஆசையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருநது துபாய்க்கு அனுப்பிய ரூ.47 கோடி மதிப்பிலான கனிமத்தை கடத்திய ஆலை ஊழியர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டை.யில் ஸ்டெர்லைட் தாமிர தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு தாமிர தாதுவிலிருந்து தாமிரம், செலினியம் பிரித்து எடுக்கப்பட்டு மீதியுள்ள ஆனோடு ஸ்லைம் என்ற கனிமம் தூத்துக்குடி துறைமுகம் வழியாக துபாய் புஜராவில் உள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது.

அங்கு ஆனோடு ஸ்லைம் கழிவிலிருந்து தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஈயம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி ரூ.47 கோடி மதிப்பிலான ஆனோடு ஸ்லைம் கனிமத்தை ஸ்டெர்லைட் தொழிற்சாலையிலிருந்து 34 இரும்பு பெரலில் பேக்கிங் செய்து தனியார் நிறுவன கன்டெய்னர் மூலம் லாரியில் ஏற்றி தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டது.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருநது மார்ச் 21ம் தேதி ஜெயிண்ட் ஜான் குளோரி என்ற சிறிய கப்பல் முலம் கொழும்பு துறைமுகம் சென்று அந்த கன்டெய்னர் இறக்கி வைக்கப்பட்டு 10 நாட்களுக்கு பின்னர் எவர்கிரின் என்ற கப்பல் மூலம் ஏப் 1ம் தேதி கொழும்பில் இருந்து துபாயில் உள்ள ஜெபல் அலி துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த கப் ஏப் 7ம் தேதி ஜெபல் அலி துறைமுகம் சென்றடைந்தது.

அதன் பின்னர் ஏப் 10ம் தேதி கன்டெய்னர் லாரிமூலம் ஏற்றப்பட்டு 11ம் தேதி புஜாராவில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு சென்றடைந்தது. அங்கு பொறுப்பாளர்கள் மற்றும் சுங்க துரையினர் முன்னிலையில் திறந்து பார்த்தபோது தூத்துக்குடி ஆலையில் இருந்து அனுப்பப்பட்ட ஆனோடு ஸ்லைம் கனிமத்திற்கு பதிலாக சாம்பல் போன்ற கனிமம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான தகவல் தூததுக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் எஸ்பியிடம் தெரிவித்த புகாரை அடுத்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் தூத்துக்குடி புதிய எஸ்பியாக பதவியேற்ற துரை கடந்த 5ம் தேதி மாவட்ட குற்றபிரிவு பொறுப்பு டிஎஸ்பி கந்தசாமி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், ஜெயசீலன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசண்முகம், ஏட்டு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் விசாரணையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் எடை போடும் நிலையத்தில் பணியாற்றும் அண்ணாநகரை சேர்ந்த கார்த்திக், நெல்லை பேட்டையை சேர்ந்த முகைதீன் காதர் ஆகியோர் திட்டமிட்டு லாரி டிரைவர் ஐசக், சிவகாசி அண்ணா காலனியை சேர்ந்த முத்துகுமார், ஸ்டெர்லைட் ஆலை கன்டெய்னர் லாரி மேற்பார்வையாளர் முரளி, வெங்கடேஷ் ஆகியோர் உதவியுடன் ஆனோடு ஸ்லைம் கனிமத்தை கடத்தி விற்க முயற்சி செய்திருப்பது தெரிய வந்தது.

இந்த கடத்தலுக்கு மூளையாக கார்த்திக் செயல்பட்டுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையில் எடை மேற்பார்வையாளராக பணிபுரிந்த அவர் ஏற்றுமதி நுணுக்கங்கள், கனிமத்தின் மதிப்பு ஆகியவற்றை தெரிந்து வைத்துள்ளார். கனிமத்தை கடத்தி விற்றால் கோடீஸ்வரர் ஆகலாம் என்ற ஆசையில் தனது நண்பர்கள் உதவியுடன் கடந்த 6 மாதமாக இந்த திட்டமிட்டுள்ளார். இந்த திட்டத்திற்கு மேற்படி நபர்களை உடந்தையாக்கி உள்ளார்.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஊழியர்கள் கார்த்திக், வெங்கடேஷ், முரளி மற்றும் ஐசக், முத்துகுமார் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.47 கோடி மதிப்புடைய 12500 டன் ஓரினல் ஆனோடு ஸ்லைம் கனிமத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். முக்கிய குறறவாளி முகைதின் காதரை போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+