டிராபிக் ராமசாமிக்கு 24 மணி நேர பாதுகாப்பு- கோர்ட் உத்தரவு

இதுதொடர்பான உத்தரவை டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. முன்னதாக டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், எனக்கு பல்வேறு தரப்பிலிருந்து அச்சுறுத்தலும், மிரட்டலும் வருகிறது. எனவே, முழு நேர போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை நீதிபதி சசிதரன் விசாரித்தார். பின்னர், மனுதாரர் டிராபிக் ராமசாமி இந்த நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளார். பொதுநலன் உள்ள அந்த வழக்குகளில் பல்வேறு முக்கிய தீர்ப்புகளையும் பெற்றுள்ளார்.
மனுதாரர் 80 வயதான சமூக சேவகர். அதிகாரிகளுக்கு எதிராகவும், வணிகர்களுக்கு எதிராகவும் அவர் வழக்குகளைத் தொடர்ந்துள்ளதால் அவருக்கு தொடர்ந்து மிரட்டல் வரும் என்பது இயற்கைதான். இதை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
எனவே, அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. எனவே, டிராபிக் ராமசாமிக்கு முழுநேர பாதுகாப்பு தரும் வகையில் துப்பாக்கியுடன் கூடிய பாதுகாப்பு அதிகாரியை போலீஸ் டிஜிபி நியமிக்க வேண்டும். இந்த இடைக்கால உத்தரவு இறுதி உத்தரவுக்கு கட்டுப்படும். வழக்கு விசாரணை ஜூலை 22ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
கட்டாய ஹெல்மட் உள்ளிட்ட பல்வேறு பரபரப்பான வழக்குகளைத் தொடர்ந்து அதில் வெற்றி பெற்றவர் டிராபிக் ராமசாமி என்பது நினைவிருக்கலாம்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications