நெல்லையில் போலி நகை கொடுத்து மோசடி-3 பேர் கைது
நெல்லை: நெல்லை நகை கடையில் போலி நகைகளை கொடுத்து மோசடி செய்த உததிரபிரதேச தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை டவுனில் உள்ள பிரபல நகை கடைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உததிரபிரதேசத்தை சேர்ந்த பிரேந்தர், அவரது மனைவி கமலா ஆகியோர் நகை எடுப்பதற்காக சென்றனர். அப்போது தாங்கள் வைத்திருந்த 10 பவுன் எடையுள்ள பழைய நகைகளை கொடுத்து அவற்றுக்கு பதில் புதிய நகை வேண்டும் என்று கூறினர்.
வளையல்களின் தரத்தை பார்த்தபோது 82 டச் இருந்துள்ளது. அவற்றுக்கு பதில் 5 பவுனுக்கு புதிய நகைகள வாங்கி சென்றனர். அவர்கள் கொடுத்த வளையல்களை கடை ஊழியர்கள் உருக்கி பார்த்தபோது அதன் மேல்பகுதியில் மட்டும் சுத்தமான தங்கமும், உள்பகுதியில் செம்பு கம்பி இருப்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து கடை உரிமையாளர் சந்திப்பு குற்றபிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் நகை கடையில் உள்ள சிசிடி கேமராவில் பதிவான அந்த தம்பதியினரை அடையாளம் பார்த்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் இதே போன்று அவர்கள் ரத வீதியில் உள்ள மற்றொரு கடைக்கு சென்று கொண்டிருந்த போது அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இதே போல் பல்வேறு கடைகளில் போலி் நகைகளை கொடுத்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இவர்களுடன் மேலும் சிலர் வந்திருப்பதாகவும், அவர்கள் கன்னியாகு்மரியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியுள்ளதாகவும் கூறினர். இதையடுத்து அங்கு சோதனை நடத்தி 40 பவுன் திருட்டு நகையை பறி்முதல் செய்தனர்.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?











Click it and Unblock the Notifications