காரைக்காலில் விழாக்கோலம்... மாங்கனிகளை வீசி பக்தர்கள் கொண்டாட்டம்
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா இன்று காரைக்காலில் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கானோர் மாங்கனிகளை வீசி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் கோவில் காரைக்காலில் உள்ளது. சிவபெருமான் மனிதராக உருவெடுத்து காரைக்கால் அம்மையார் வீட்டில் அமுது உண்டதாக வரலாறு கூறுகிறது. இதை நினைவு கூறும் வகையில் காரைக்கால் அம்மையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது.
இந்த திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காரைக்கால் அம்மையார்-பரமதத்த செட்டியார் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று இரவு சிவபெருமானான பிச்சாண்டவமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு காரைக்கால் அம்மையார்-பரமதத்த செட்டியார் முத்து பல்லக்கில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான மாங்கனி திருவிழா இன்று காலை நடந்தது. சிவபெருமான் அடியார் கோலத்தில் வீதி உலா புறப்பட்டார். சுவாமி வீதி உலா வந்தபோது அந்த தெருக்களில் பக்தர்கள் வீட்டு மாடிகளிலிருந்து மாங்கனிகளை வீசி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
அந்த மாங்கனிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் எடுத்து சென்றனர். இன்று மாலை சுவாமி அம்மையார் கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications