கிழிஞ்ச டிரவுசர் போட்ட நான்... சிங்கமுத்து உருக்கம்!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சீருடை, இலவச நோட்டு-புத்தகம், சைக்கிள், ஜியாமெட்ரி பாக்ஸ், மடிக்கணினி வரை வழங்கப்படுகிறது. நான் படிக்கும்போது கிழிந்த டிரவுசரை போட்டுக் கொண்டு நடந்தேன். அதனால் ஜெயலலிதா ஆட்சியில் பிறந்திருக்க கூடாதா என்று இன்று சிந்திக்கிறேன் என்று பேசியுள்ளார் சிரிப்பு நடிகர் சிங்கமுத்து.

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக அரசின் ஈராண்டு சாதனையை விளக்கி தெருமுனைப் பிரசாரக் கூட்டங்கள் நடந்தன. அதில் சிறப்பு அழைப்பாளராக சிரிப்பு நடிகர் சிங்கமுத்து அழைக்கப்பட்டிருந்தார்.

சிங்கமுத்து பேச்சிலிருந்து சில பகுதிகள்...

ஜெயலலிதாவுக்கு தூக்கமே வரலை...

ஜெயலலிதாவுக்கு தூக்கமே வரலை...

2 ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்று இரவு ஜெயலலிதாவுக்கு தூக்கம் வரவில்லை. ஒட்டுமொத்த தமிழக மக்களும் நமக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்களே அவர்களுக்கு என்ன செய்வது? என்று சிந்தித்து கொண்டே இருந்தார்.

பேனாவை தலைகீழாகப் பிடித்தார்

பேனாவை தலைகீழாகப் பிடித்தார்

அதனால் தான் ஆட்சி பொறுப்பேற்றவுடன் பேனா முனையை தலைகீழாக பிடித்தார். மக்களின் பசிப்பிணி போக்கப்பட்டது. 20 கிலோ அரிசி வழங்குவது சாதாரண விஷயம் கிடையாது.

கர்ப்பிணியாக இருக்கும்போதே...

கர்ப்பிணியாக இருக்கும்போதே...

திமுக ஆட்சியில் ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்பட் டது. ஜெயலலிதா ஆட்சியில் பிறக்கும் குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள். கர்ப்பிணியாக இருக்கும்போதே தாய்மார்களுக்கு அரசு ரூ.6 ஆயிரம் வழங்குகிறது.

கிழிஞ்ச டிரசவுர்

கிழிஞ்ச டிரசவுர்

பின்னர் அந்த குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது சீருடை, இலவச நோட்டு-புத்தகம், சைக்கிள், ஜாமிட்டிரி பாக்ஸ், மடிக்கணினி வரை வழங்கப்படுகிறது. நான் படிக்கும்போது கிழிந்த டிரவுசரை போட்டுக் கொண்டு நடந்தேன். அதனால் ஜெயலலிதா ஆட்சியில் பிறந்திருக்கமாட்டேனா என்று சிந்திக்கிறேன்.

அதான் படமில்லாமல் இருக்கிறார் வடிவேலு

அதான் படமில்லாமல் இருக்கிறார் வடிவேலு

என்மீது நடிகர் வடிவேலு ரு.7 கோடி மோசடி புகார் கொடுத்தார். தேர்தலின்போது எம்.ஜி.ஆர். உருவாக்கிய இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து பிரசாரம் செய்தார். அதன் விளைவாக 2 ஆண்டுகள் எந்த படமும் இல்லாமல் இருக்கிறார்.

வாழ்ந்ததாக சரித்திரமே கிடையாது

வாழ்ந்ததாக சரித்திரமே கிடையாது

எம்.ஜி.ஆரை எதிர்த்தவர்கள் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. கருணாநிதியே வீட்டில் முடங்கி கிடக்கிறார்.

வடிவேலு படத்தை மக்கள் பார்க்க மாட்டார்கள்

வடிவேலு படத்தை மக்கள் பார்க்க மாட்டார்கள்

இப்போது வடிவேலு ஒரு படத்தில் நடிப்பதாக சொல்கிறார். அந்த படத்தை தமிழக மக்கள் பார்க்க மாட்டார்கள்.

ஜெயலலிதாதான் அடுத்த பிரதமர்

ஜெயலலிதாதான் அடுத்த பிரதமர்

ஜெயலலிதாவுக்கு இந்தியாவை ஆளும் தகுதி உள்ளது. அவர் பிரதமராக வரவேண்டும் என்பதற்காகதான் அத்வானியே மோடியை எதிர்க்கிறார். எனவே நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெற பாடுபட வேண்டும் என்றார் சிங்கமுத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+