ஈழப் படுகொலையைக் கண்டித்து மாணவர் பேரவை வாகனப் பேரணி
சென்னை: இனப்படுகொலை செய்த சிங்கள அரசைக் கண்டித்தும் இலங்கைப் பொருட்களை புறக்கணிக்கக் கோரியும் அனைத்து கல்லூரி மாணவர்கள் மெரீனா கடற்கரையில் காந்தி சிலை முன் இருந்து இருசக்கர வாகனப் பேரணி தொடங்கியுள்ளார்கள்.
தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்..காந்தி சிலை முன் மருத்துவர் எழிலன் நாகநாதன் கொடியசைத்த பின் வாகனப் பேரணியை துவக்கிய கல்லூரி மாணவர்கள் இவர்களுடன் அந்தந்த ஊர்களில் அனைத்து கல்லூரி மாணவர்களும் இணைந்து கொள்கிறார்கள்.

மாணவர்கள் வீ.பிரபாகரன்,நந்தகுமார்,அருண் மொழி வர்மன், கார்த்தி,கார்த்திகேயன்,முரளி.முரளி,குமார்,விக்கிவிக்னேஸ்வரன், ஜெயச்சந்திரன்,விஜயபாலன், அனுஷ்,மது ஆகிய மாணவர்களின் வாகன பேரணி கீழ்க்கண்ட ஊர்களின் வழியாக மக்களிடம் இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர்.
23/06/13- சேலம்-ஈரோடு-கோவை, 24/06/13- பொள்ளாச்சி-உடுமலைபேட்டை -பழனி-புதுக்கோட்டை,25/06/13- காரைக்குடி-ராமநாதபுரம்-ராமேஸ்வரம்,26/06/13- தூத்துக்குடி-திருநெல்வேலி-கன்னியாகுமரி 27/06/13- கன்னியாகுமரி-கோவில்பட்டி-விருதுநகர்-திருமங்கலம்-மதுரை 28/06/13- திருச்சி-தஞ்சாவூர்,29/06/13- கும்பகோணம்-மயிலாடுதுறை-சிதம்பரம்-புதுச்சேரி 30/06/13- புதுச்சேரி-சென்னை.












Click it and Unblock the Notifications