உங்க ஓட்டும் எங்களுக்கே.. அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு விஜயகாந்த் கடிதம்

Subscribe to Oneindia Tamil

Vijayakanth seeks rebel MLAs support to DMDK candidate
சென்னை: தேமுதிக சார்பில் போட்டியிடும் ஏ.ஆர். இளங்கோவனுக்கே வாக்களிக்க வேண்டும் என்று கோரி அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏக்கள் 7 பேருக்கும் விஜயகாந்த் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜ்யசபா தேர்தலில் தேமுதிக சார்பில் ஏ.ஆர். இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரது வெற்றி பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. தேமுதிகவிடம் மொத்தம் 29 பேர் உள்ளனர். இருப்பினும்இதில் 7 பேர் அதிருப்தி எம்.எல்.ஏக்களாகி விட்டனர். இவர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக திரும்பியுள்ளனர்.

எனவே 22 பேரை மட்டுமே வைத்துள்ளது தேமுதிக. இக்கட்சி வெற்றி பெற 12 பேரின் ஆதரவு தேவை. இதைத் திரட்டும் முயற்சியில் அக்கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. காங்கிரஸின் 5 பேர் ஆதரவை தேமுதிக கோரி நிற்கிறது. மேலும் அதிருப்தியாளர்கள் 7 பேரின் ஆதரவையும் தற்போது கோரியுள்ளது.

இதுதொடர்பாக அதிருப்தியாளர்கள் 7 பேருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் மூலம் கோரிககை விடுத்துள்ளார்.

தேமுதிக வேட்பாளர் இளங்கோவனுக்கு தவறாமல் ஓட்டுப்போட வேண்டும் என்று அனைத்து தேமுதிக எம்.எல்.ஏ.க்களுக்கும் விஜயகாந்த் கடிதம் எழுதி உள்ளார். இதில் 7 அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏக்களும் அடக்கம்.

அதேபோல தேமுதிக கொறடாவும் அத்தனை எம்.எல்.ஏக்ளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் ராஜ்யசபா தேர்தலில் கொறடா உத்தரவிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+