அந்தப் பக்கம் ரேகா, இந்தப் பக்கம் இன்னொரு ரேகா.. பட்டையைக் கிளப்பிய பகவதி கல்யாணம்!
ஜெய்ப்பூர்: ரேகா என்ற பெயருடைய இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் உதய்ப்பூரைச் சேர்ந்த ஒரு இளைஞர். அவரது பெயர் பகவதி லால்.
உதய்ப்பூர் மாவட்டம் சதர்புரா கிராமத்தில்தான் இந்த இரட்டைத் திருமணம் கோலாகலமாக நடந்துள்ளது.
பகவதி லால் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் ஆவார். 23 வயதாகிறது. இவர் ரேகா என்ற பெயருடைய பெண்ணுடன் திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி வந்தார். இந்த நிலையில் ரேகா என்ற பெயர் கொண்ட இன்னொரு பெண் மீதும் காதல் கொண்டார்.
பின்னர் இருவரையும் திருமணம் செய்ய தீர்மானித்தார். பகவதியின் குடும்பத்தினர் ரேகாக்களின் குடும்பத்தினருடன் பேசினர். அவர்களும் சம்மதித்தனர். இதையடுத்து இருவரையும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் மணக்க முடிவு செய்தார் பகவதி லால். திருமண ஏற்பாடுகளும் தொடங்கின.
அதன்படி ஒரே இடத்தில் வைத்து இரு ரேகாக்களையும் மணந்தார் பகவதி லால். தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். ஆனால் தங்களது பாரம்பரியப்படியே திருமணம் நடந்ததாகவும், இரு பெண்களை மணப்பது தங்களது ஜாதிக்குள் சர்வ சாதாரணம் என்றும் பகவதி லால் மற்றும் இரு ரேகாக்களின் குடும்பத்தினரும் போலீஸாரிடம் தெரிவித்தனர்.
இருப்பினும் இரு பெண்களுக்கும் திருமண வயது வந்து விட்டதா அல்லது மைனரா என்பதை அறிவதற்காக அவர்களது ஊருக்கு ஒரு ஏட்டையா போயுள்ளாராம்.












Click it and Unblock the Notifications