உ.பி.: உறவுக்காரரால் 10 மாதமாக கற்பழிக்கப்பட்ட சிறுமி கர்ப்பம்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் உறவுக்கார வாலிபரால் 10 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கர்ப்பமாக உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம் தாம்பூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை 26 வயது உறவுக்காரர் ஒருவர் கடந்த 10 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். அவர் கர்ப்பமான பிறகே நடந்த விஷயம் குடும்பத்தாருக்கு தெரிய வந்தது.
தன்னை உறவுக்காரர் தான் இந்த நிலைமைக்கு ஆளாக்கினார் என்று அந்த சிறுமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications