ம.பி.யில் கலெக்டர் அலுவலகம் முன்பு பாஜக தலைவரை செருப்பால் அடித்த பெண்
போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக தலைவர் ஒருவரை பெண் ஒருவர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வைத்து செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் டின்டோரி மாவட்டம் டின்டோரி ஜில்லா பஞ்சாயத்தின் துணை தலைவர் பாஜகவைச் சேர்ந்த கிருஷ்ணா பார்மர். அவர் வீட்டில் வாடகைக்கு இருந்த பெண் ஒருவரை அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் கடந்த சனிக்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டின்டோரி தொகுதி அமைச்சர் தேவி சிங் சய்யம் கலந்து கொண்ட கூட்டம் நடப்பதை அறிந்து அங்கு வந்தார்.
அப்போது கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு பார்மர் வெளியே வந்தார். அவரைப் பார்த்த அப்பெண் அவருடன் வாக்குவாதம் செய்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி பார்மர் அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. உடனே அப்பெண் தனது செருப்பால் பார்மரை அடிக்க பதிலுக்கு அவர் அந்த பெண்ணை தனது ஷூவால் அடித்தார்.
இந்த சம்பவம் குறித்து பார்மர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தபோதும் அந்த பெண் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.












Click it and Unblock the Notifications