வெங்கையா நாயுடு மகளிடம் செல்போனில் ஆபாச பேச்சு.. சென்னை இளைஞர் கைது!

Subscribe to Oneindia Tamil

Venkaiah Naidu
சென்னை: பாரதிய ஜனதா மூத்த தலைவர் வெங்கையா நாயுடுவின் மகளிடம் செல்போனில் ஆபாசமாக பேசியதாக சென்னை பொறியாளர் ரமேஷ்குமார் (வயது 31) கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஈக்காட்டுதாங்கலில் கார், மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார் வெங்கையா நாயுடுவின் மகள் தீபாவெங்கட். இவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் ஒன்றில். நாள்தோறும் தமது செல்போனில் ஒருநபர் ஆபசமாக பேசி தொல்லை தருவதாக கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து அந்த நபரைக் கண்டுபிடிக்க சைபர்கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த செல்போனின் உரிமையாளர் திருமுல்லைவாயிலைச் சேர்ந்த பெண் என தெரியவந்தது. ஆனால் அவரோ தமது செல்போன் ஓராண்டுக்கு முன்பே காணாமல் போய்விட்டது என்றார்.

பின்னர் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த பொறியாளர் ரமேஷ்குமார் சிக்கினார். தாம் கல்லூரியில் படித்த போது மாணவி ஒருவர் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் இதற்கு பழிவாங்கவே உடன் படித்த மாணவிகள் மற்றும் சிலருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்தததாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+