ராஜ்யசபா தேர்தலில் ஓட்டுப்போட 6 தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்களுக்கு ஹைகோர்ட் அனுமதி

Subscribe to Oneindia Tamil

HC permits 6 suspended DMDK MLAs to vote in RS poll
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தே.மு.தி.க அதிருப்தி எம்.எல்.ஏ மைக்கல் ராயப்பனை தாக்கியதாக கூறி தே.மு.தி.க கொறடா வி.சி. சந்திர குமார், பார்த்த சாரதி, முருகேசன், நல்லத்தம்பி, செந்தில் குமார், அருட்ச்செல்வன் ஆகிய தே.மு.தி.க எம்.எல்.ஏ க்கள் 6 பேர் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி ஓர் ஆண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர் பின்னர் அது ஆறு மாத காலமாக குறைக்கப்பட்டது. எம்.எல்.ஏ க்கள் 6 பேரும் ஆறு மாத காலத்துக்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கான எந்த சலுகைகளையும் ஊதியத்தையும் பெற முடியாது என்றும் சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 6 பெரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, 6 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் தே.மு.தி.க போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் எங்கே வாக்களிக்க முடியாமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில், ராஜ்யசபா தேர்தலில் தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் வாக்களிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+