ராஜ்யசபா தேர்தலில் விஜயகாந்த் ஓட்டுப் போட முடியுமா?: மனு போட்ட பெண்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கடந்த சட்டமன்ற தேர்தலில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது பெற்றியை எதிர்த்து அங்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஜெயந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், விஜயகாந்த் வெற்றி செல்லும் என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயந்தி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், ராஜ்யசபா தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாக்களிக்க அனுமதிக்க கூடாது என்று கோரி ஜெயந்தி சென்னையில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று மனு அளித்துள்ளார்.
விஜயகாந்த் எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்றது செல்லாது என்பதை அறிவிக்கக் கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் ராஜ்யசபா தேர்தலி்ல் விஜயகாந்த் வாக்களிக்க அனுமதிக்க கூடாது என்று மனுவில் கூறியுள்ளார்.
ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவிற்கு வாக்களிக்க கோரி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 29 பேருக்கும் விஜயகாந்த் கடிதம் எழுதி வரும் நிலையில், விஜயகாந்த் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications