ஓ... காட்..! இங்கிலாந்து மியூசியத்தில் தானாக நகரும் எகிப்து சிலையால் பீதி!!
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள 4000 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்திய சிலை ஒன்றுதானாக நகர்ந்து வருவதால் பீதி ஏற்பட்டுள்ளது.
எப்படி இந்த சிலை நகர்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இதனால் இந்த சிலை வைக்கப்பட்டுள்ள மான்செஸ்டர் அருங்காட்சியக நிர்வாகிகள் குழப்பமடைந்துள்ளனர்.
இதுவரை அநத் சிலை 180 டிகிரி அளவுக்கு நகர்ந்து நிற்கிறது. சுழன்றபடி அது நகர்வதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

10 இன்ச்தாங்க. பாஸு...
அந்த சிலை வெறும் 10 இன்ச் உயரம்தான் கொண்டது. கி.மு. 1800ம் ஆண்டு சிலை இது.

மம்மியிடமிருந்து மீட்கப்பட்டது
80 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிலையை எகிப்து மம்மி ஒன்றிடமிருந்து கண்டுபிடித்து எடுத்தனர். பின்னர் இது மான்செஸ்டர் அருங்காட்சியகத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

மெதுவா மெது மெதுவா...
இந்த சிலையானது கடந்த சில வாரங்களில் மெதுவாக சுழன்றபடி நகர்ந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முதலில் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் திடீரென சிலை இருந்த நிலையிலிருந்த வேறு பக்கம் திரும்பியபடி இருப்பதைப் பார்த்துஅருங்காட்சியக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போதுதான் சிலை நகர்ந்தது தெரிய வந்தது. அவர்களுக்கு.

'டே'.. சீனு...!
இந்த சிலையில் உள்ள நபரின் பெயர் நெப் சீனு என்பதாகும். இந்த சிலை இரவில் நகருவதில்லை. பகலில்தான் சுழன்று நகர்கிறது. இதுதான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பாரோ மன்னர்களின் சாபம் காரணமா??
பாரோ மன்னர்கள் விடுத்த சாபம்தான் இந்த சிலையின் மர்மத்திற்கு காரணம் என்று ஒரு குரூப் கதையைக் கிளப்பி விட்டுள்ளது.

இருக்கலாம்ப்பா....!
இதுகுறித்து அருங்காட்சியகத்தின் கியூரேட்டர்களில் ஒருவரான காம்பல் பிரைஸும் நம்புகிறார். அவர் கூறுகையில், இருக்கலாம், சாபமாகக் கூட இருக்கலாம் என்றார் பிரைஸ்.

என் கிட்டதானே சாவி இருக்கு...!
பிரைஸ் மேலும் கூறுகையில், என்னிடம் மட்டுமே சிலை வைக்கப்பட்டுள்ள பெட்டகத்தின் சாவி உள்ளது. இந்த நிலையில் சிலை எப்படி நகருகிறது என்பது ஆச்சரியமாக உள்ளது. யாரும் சிலையைத் தொடவே முடியாது. எனவே இதில் இறை மர்மமும் இருக்கலாம் என நம்புகிறேன் என்றார்.
பட்னு போய் 'பட்லர்' கடைல பத்து பைசாவுக்கு வெத்தலை வாங்கி மை போட்டுப் பாருங்கப்பா... !
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications