வட சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய இலவச மருத்துவ முகாம்: ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 5ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வட சென்னை மாவட்டம் சார்பாக கொளத்தூர் தொகுதி ஆர்.கே மஹாலில் இலவச மருத்துவ முகாம் கடந்த 23ம் தேதி நடைபெற்றது.
இம்முகாமிற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் கொளத்தூர் தொகுதி தலைவர் கராத்தே யூசுப் தலைமை தாங்கினார். செயலாளர் இம்ரான் அஹமது பெய்க் வரவேற்புரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மாநில துணை தலைவர் எஸ்.எம்.ரஃபீக் அஹமது, பொதுச் செயலாளர் நெல்லை முபாரக், செயலாளர் அமீர் ஹம்சா, மருத்துவ சேவை தலைவர் ஹிதாயத்துல்லா செரீஃப் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

முன்னாள் துணை முதல்வரும், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டு சிறப்புரையாற்றினார். வட சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ரஷீது மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.கே.கரீம் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்.
இம்முகாமில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 2140 நபர்கள் கலந்து கொண்டு இலவச மருத்துவ சிகிச்சை பெற்றனர். சுமார் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
இறுதியாக தொகுதி பொருளாளர் ஜாக்கீர் பாய் நன்றி கூறினார்.
-
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications