ராஜ்யசபா தேர்தலில் திமுக ஆதரிக்கக் கூடாது..: சோனியா, ராகுலுக்கு ‘தூபம்’ போட்டாரா ப.சிதம்பரம்?!

ராஜ்யசபா தேர்தலில் திமுக, தேமுதிக இரண்டுமே காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கோரி இருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சியோ இன்னமும் முடிவை அறிவிக்காமல் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி முதலில் திமுகவைத்தான் ஆதரிப்பதாக வலிய வந்து கூறியிருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளின் போது கனிமொழியிடம் பேசிய காங்கிரஸின் மூத்த தலைவர் அகமது படேல், நீங்கள் நிற்பதாக இருந்தால் உங்களுக்கு ஆதரவு தருகிறோம் என சோனியா சொல்லிவிட்டார்.. இதை அப்பாவிடமும் சொல்லிவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். கனிமொழியோ பிடிகொடுக்காமல் அப்பாவிடம் சொல்லிவிடுகிறேன் என்று கூறியிருக்கிறார். காரணம் அப்போது தேமுதிக, அல்லது மார்க்சிஸ்ட் ஆதரவு தங்களுக்குக் கிடைத்துவிடும் என்ற திமுகவின் நம்பிக்கைதான்..
ஆனால் கடைசியில் எல்லாமே தலைகீழாக மாறிப் போக தேமுதிகவும், திமுகவும் நேருக்கு நேர் மோத வேண்டிய நிலைமை. சென்னையில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம் நேரில் சென்று ஆதரவு கேட்டிருக்கின்றனர். அதன் பின்னர் டெல்லியில் திமுகவின் டி.ஆர். பாலு, காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார். அப்போதுதான் டி.ஆர். பாலுவோ, திமுகவின் தயவு காங்கிரஸுக்கு தேவை என்ற தொனியில் பேச சோனியாவோ, அகமது படேல் மூலமாகவும் ஜெயந்தி நடராஜன் மூலமாகவும் ஆதரவு தருகிறோம் என்று சொன்னோம். அப்போதெல்லாம் நீங்கள் ஏன் பதிலே சொல்லலை என்று எகிறும் போக்கில் பேச பாலு அமைதியாகி இருந்திருக்கிறார்.
இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்ட நிதியமைச்சர் ப.சிதம்பரம், திமுகவை எப்போதும் மிரட்டியபடியே வைத்திருக்க வேண்டுமெனில் தேமுதிக இத்தேர்தலில் காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும் என்று சோனியாவிடமும் ராகுல் காந்தியிடம் தூபம் போட்டிருக்கிறார் என்கிறார்கள்.
அதே நேரத்தில் ஜெயந்தி நடராஜன் மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் திமுகவை ஆதரிக்கலாமே என்று கூறுவதாகவும் தெரிகிறது.
இதனால் சிதம்பரம் மீது செம கடுப்பில் இருக்கிறது திமுக.
-
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம்












Click it and Unblock the Notifications