குதிரை பேரம்... ராஜ்யசபா தேர்தல் முடிவுக்கு தடை கோரிய மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி!

Subscribe to Oneindia Tamil

Petition seeks stay on RS poll
சென்னை: ராஜ்யசபா தேர்தல் முடிவுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் ஜூன் 27ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. 6 இடங்களுக்கு 7 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சி வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தேமுதிக, திமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

இந் நிலையில் சத்யாலயா ராமகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், வரும் 27ம் தேதி நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்தலில் 5 பேரை வெற்றி பெறச் செய்வதற்கான பலம் அதிமுக அணிக்கு உள்ளது. அந்த அணியின் சார்பில் 4 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதுபோக 6வது இடத்துக்கான உறுப்பினரை தேர்வு செய்ய திமுக, தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

திமுகவுக்கு 23 உறுப்பினர்களும், தேமுதிகவுக்கு 29 உறுப்பினர்களும் பேரவையில் உள்ளனர். இதில் தேமுதிக உறுப்பினர்கள் 7 பேர் கட்சியின் மீது அதிருப்தியில் உள்ளனர்.

மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் 34 வாக்குகள் தேவை. எனவே இந்த எண்ணிக்கையை எட்டுவதற்காக சிறிய கட்சிகளின் உறுப்பினர்களை விலை பேசி வாங்கும் குதிரை பேர நடவடிக்கைகளில் திமுக மற்றும் தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டிய தேர்தலை இவ்வாறு குதிரை பேர வியாபாரமாக்கி அதன் மூலம் தேர்தல் வெற்றியை நிர்ணயம் செய்வது அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது. எனவே நடைபெற உள்ள தேர்தலில், தேர்தல் நடைபெற்றாலும் கூட தேர்தல் முடிவை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அதன்பிறகு உயர் நீதிமன்றம் இது குறித்து விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, இன்று தலைமை நீதிபதி ஆர்கே. அகர்வால், எம். சத்யநாராயணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதால், இந்த தேர்தல் நடவடிக்கையில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+