மும்பையில் 4 சிறுவர்களால் கற்பழிக்கப்பட்ட 10 வயது ஏழை சிறுமி பலி

Subscribe to Oneindia Tamil

மும்பை: நவி மும்பையில் 4 சிறுவர்களால் கற்பழிக்கப்பட்ட 10 வயது சிறுமி பலியானார்.

நவி மும்பை துர்பே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 16ம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். அந்த நேரம் பார்த்து 4 சிறுவர்கள் அந்த ஏழை சிறுமியிடம் ரூ.10 நோட்டை காட்டி மலைப்பகுதிகிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அந்த 4 சிறுவர்களும் சிறுமியை கற்பழித்தனர். பின்னர் சிறுமியை அவரது வீட்டில் விட்டுவிட்டனர்.

இந்த சம்பவத்தை அடுத்து சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பெற பணம் இல்லாததால் அவரை 4 நாட்கள் வீட்டிலேயே வைத்துள்ளனர். பின்னர் அவரது நிலைமை மோசமானதும் கடந்த வாரம் அவரை வஷியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமி பயந்து கொண்டு தனக்கு நடந்த கொடூரத்தை பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அவரை பார்க்க அவருடன் படிக்கும் தோழி ஒருவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரிடம் சிறுமி நடந்த விவரங்களை தெரிவித்தார். அவர் அதை சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 6 முதல் 13 வயது வரை உள்ள 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிர் இழந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+