ஃபேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை பார்த்து அழகிகளை தேடிச் சென்றவர் கொலை: 2 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே திருவள்ளூர்- செங்குன்றம் நெடுஞ்சாலையில் உள்ளது காரணிப்பாட்டை என்னும் கிராமம். கடந்த 9ம் தேதி அங்கிருக்கும் சாலையின் தென்பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தார்.
இந்த சம்பவம் குறித்து வெங்கல் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பிணமாகக் கிடந்தவர் சென்னை மைலாப்பூர் ஆதாம் தெருவைச் சேர்ந்த மனோஜ் குமார் (37) என்பதும், அவருக்கு ஜெயா (34) என்ற மனைவியும், ரிச்சி (12) என்ற மகளும் உள்ளதும் தெரிய வந்தது.
மனோஜ் துரைப்பாக்கம் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் டீம் மேனேஜராக வேலை பார்த்து வந்துள்ளார்.
அவரது கொலைக்கான காரணத்தை போலீசார் ஆராய்ந்தபோது சில திடுக் தகவல்கள் கிடைத்தன.
ஃபேஸ்புக்கில் அழகிய பெண்கள் வேண்டுமா என்று போடப்பட்டிருந்த போஸ்டைப் பார்த்துவிட்டு, அதில் இருந்த இமெயில், தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார்.
இதையடுத்து அவரை வரவழைத்து கொலை செய்துள்ளனர் இருவர்.
இந்த கொலை தொடர்பாக தண்டையார்ப்பேட்டை மாநகர பஸ் பணிமனையில் மெக்கானிக்காக உள்ள வெங்கடேசன் (29) மற்றும் மாதவரம் மாநகர பஸ் பணிமனையில் மெக்கானிக் தயானந்தன் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
நாங்கள் இருவரும் கடந்த 8ம் தேதி மனோஜ்குமாரின் போனில் தொடர்பு கொண்டு அழகிய பெண்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டுமானால் உடனடியாக வரவும் என்று அழைத்தோம். அதன்படி எங்களை சந்தித்த அவர், நாங்கள் கேட்ட பணத்தை தர மறுத்தார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து எங்களை போலீசில் மாட்டி விடுவேன் என்று மிரட்டினார்.
இதையடுத்து அவரிடம் சமாதானமாகப் போவது போல நடித்து ஒரு பாரில் போய் குடித்தோம். மனோஜ்குமாருக்கு அதிக அளவில் மது வாங்கி கொடுத்து போதையில் மட்டையாக்கினோம். பின்னர் அவரை கொலை செய்தோம் என்று கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications