செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் 85 வயதான பாட்டி ஒருவர் செங்கற்களை சாப்பிட்டு உயிர் வாழ்கிறார். இது பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் பட வைத்துள்ளது.
தூத்துக்குடி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சரஸ்வதி வயது 85. இவரது கணவர் மாரியப்பன் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தற்போது தனியாக வசித்த வரும் சரஸ்வதி அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குதண்ணீர் பிடித்து கொடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இவரது உணவே செங்கல்தான். நொறுக்கு தீனியாக செங்கல்லை சாப்பிட்டு வருகிறார். இதனால் அப்பகுதியில் இவரை செங்கல்பாட்டி என்றுதான் அழைக்கின்றனர். நாள்தோறும் 1 முதல் 3 வரையிலான செங்கல்களை அவர் விரும்பி சாப்பிடுகிறார். நாம் உணவு அருந்துவதை போல் அவர் பகல் முழுவதும் செங்கலை மென்று கொண்டே இருக்கிறார் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
சிறுவயதில் செங்கலை சுவைக்கத் தொடங்கினார். அதன் சுவை பிடித்துப் போகவே சிறுது சிறிதாக செங்கல்லை சாப்பிட துவங்கியுள்ளார். கண்ணில் எங்கு செங்கல் பட்டாலும் எடுத்து சாப்பிட துவங்கி விடுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் 85 வயதாகியும் என்னால் செங்கல்லை சாப்பிடாமல் இருக்க முடியவில்லை.
செங்கல் சாப்பிடுவது பற்றி பாட்டி கூறியதாவது:
திருமணத்திற்கு முன்னர் எனது பெற்றோர் திட்டினர். திருமணத்திற்கு பின்னர் எனது கணவர் சத்தம் போட்டார். ஆனால் என்னால் விடமுடியவில்லை. பசி காரணமாகவோ, வறுமை காரணமாகவோ இதை நான் செய்யவில்லை. இது நிறைய செங்கல்லை சாப்பிட்டும் கூட எனது உடல் நிலை பாதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது முதியோர் பென்சன் வேண்டி போராடி வருகிறேன் வேதனையுடன் தெரிவித்தார்.
பாட்டிக்கு முதியோர் பென்சன் கிடைக்க அரசு அதிகாரிகள் ஆவண செய்வார்களா?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications