இலங்கை: 'கல்யாண மன்னனை’க் காட்டிக் கொடுத்த 23வது காதல் மனைவி!
கொழும்பு: விளம்பரங்கள் மூலமாக 23 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்த 'பலே காதல் மன்னன்' இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளான்.
இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள காலி மாவட்டம், பட்டேகாமா பகுதியை சேர்ந்த இந்த மோசடி மன்னனுக்கு கல்யாணம் செய்து கொள்வது மட்டுமே நல்ல வருமானத்தைத் தரக் கூடிய வேலை என்ற கொள்கை போலும்.
அரபு நாட்டில் வேலை செய்பவர் என்ற அடையாளத்தோடு, பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்களில் 'மணமகள் தேவை' மற்றும் 'வெளிநாட்டில் வேலை செய்ய பெண்கள் தேவை' என விளம்பரம் கொடுத்துள்ளான் இந்த மோசடி மன்னன். விளம்பரத்தைப் பார்த்து இவன் வலையில் விழுந்த பெண்களின் எண்ணிக்கை 23 என தெரிவித்துள்ளனர் பட்டேகாமா போலீசார்.
இவனது குறிக்கோள் எல்லாம் பெரும்பாலும் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தானாம். வலையில் விழுந்த பெண்களை திருமணம் செய்து, முடிந்தவரையில் அவர்களிடம் உள்ள பணத்தையெல்லாம் சுருட்டி விட்டு ஓடி விடுவது இவனது வாடிக்கையாம்.
தற்போது, இவனது 23வது மனைவி கொடுத்துள்ள புகாரின் பேரில், இந்தக் ‘கல்யாணமன்னனை' கைது செய்துள்ளனர் பட்டேகாமா போலீசார்.












Click it and Unblock the Notifications