உத்தரகண்ட் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் என்ன ஆனார்கள்?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: உத்தரகண்ட் மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை.

விழுப்புரத்தைச் சேர்ந்த பாபு என்பவர் தலைமையில் 19 பெண்கள் உள்பட 37 பேர் உத்தரகண்ட் மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்றனர். அவர்கள் உத்தரகண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கினர். இந்நிலையில் 25 பேர் பத்திரமாக ஊர் திரும்பியுள்ளனர். விஜயா என்பவர் பசியால் உயிர் இழந்தார் என்றும், பாபுவை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது என்றும் வந்தவர்கள் தெரிவித்தனர்.

What happened to 10 tamils stranded in Uttarakhand?

மேலும் பாபு உயிரோடிருக்க வாய்ப்பு குறைவு என்றும் அவர்கள் தெரிவித்தனர். அவர்களுடன் சென்ற கருணாமூர்த்தி, நரசிம்மன், கனகவள்ளி, வசந்தகுமாரி, கீதா, லட்சுமி, சித்தரா, ராதாபாய், ஸ்ரீலதா, உஷா ஆகிய 10 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களை மீட்டுத் தருமாறு அவர்களின் குடும்பத்தார் மாவட்ட கலெக்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தரகண்டில் இன்னும் 5,000 பேர் சிக்கித் தவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+