நெல்சன் மண்டேலா... டுவிட்டர், பேஸ்புக்கில் தீயாய் பரவும் வதந்தி

94 வயதாகும் நெல்சன் மன்டேலா அவரது சிறு நீரகம் மற்றும் கல்லீரல் செயல் இழந்துள்ளதால் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக மருத்துவமனையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் சி.என்.என் செய்தியாளர் பியர்ஸ் மோர்கனின் டிவிட்டர் அக்கவுண்ட் போன்று போலியாக உருவாக்கப்பட்ட டிவிட்டர் பக்கத்தில் நெல்சன் மண்டேலா இறந்து விட்டதாக வதந்தி பரவியது.
அதே போல பேஸ்புக்கிலும் இதே போன்ற வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.
மண்டேலா, கடந்த சனிக்கிழமை அதிகாலை நுரையீரல் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்படிருந்ததால் அவரது வீட்டில் இருந்து 4 வது முறையாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டிருக்கிறார். நெல்சன் மண்டேலாவிற்கு நுரையீரல் தொற்று தீவிரமடைந்துள்ளதால் பிரிட்டோரியாவில் உள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தற்பொழுது அவரது உடல்நிலை மிகவும் மோசமான கட்டத்தில் இருப்பதாகவும் தென் ஆபிரிக்காவின் தற்போதைய ஜனதிபதி ஜேகப் ஜூமா அறிவித்துள்ளார்.
பயணம் ரத்து
நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால் அவருக்கு உயிர்காக்கும் உபகரண உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து தனது மொசாம்பிக் பயணத்தை ரத்து செய்து இருக்கிறார் அதிபர் ஜேகப் ஜூமா.
வழி அனுப்பிவைக்கும் நேரம்
இதனிடையே சண்டே ரைம்ஸ் தனது முதல் பக்கத்தில் புன்னகைத்தபடி கையசைத்துக்கொண்டிருக்கும் எல்லோராலும் நேசிக்கப்படும் நெல்சன் மண்டேலாவின் படத்தை "இது அவரை வழி அனுப்பி வைக்கும் நேரம்"என்ற தலையங்கத்துடன் பிரசுரித்துள்ளது. தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள கடுமையான உடல் நிலை பாதிப்புகளை அடுத்து தென் ஆப்பிரிக்க மக்கள் தமது முதல் கறுப்பின ஜனாதிபதி, தென் ஆப்பிரிக்காவின் தேசத் தந்தையுமான நெல்சன் மண்டேலாவின் மரணத்தை சந்திக்க மிகுந்த சோகத்துடன் தயாராகி வருகின்றனர் என்பதுதான் உண்மை.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications