நோன்பு கஞ்சிக்கான அரிசியை முன்கூட்டியே வழங்க தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை
சென்னை: ரமலான் நோன்பு துவங்கும் முன்பே நோன்பு கஞ்சிக்கான அரிசியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கட்சி தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், பொருளாளர் எம்.எல்.ஏ.ஷாஜகான், எம்.அப்துல் ரகுமான் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு,
உத்தகரகண்ட் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் பிரதமர் நிவாரண நிதிக்கு கட்சி சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
தினத்தந்தி அதிபர் டாக்டர். பா. சிவந்தி ஆதித்தனின் மறைவு தமிழக பத்திரிக்கை உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் தினத்தந்தி குழும ஊழியர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
புனித ரமலான் நோன்பு வரும் ஜூலை மாதம் 10ம் தேதி துவங்கவிருக்கிறது. இதனால் நோன்பு துவங்கும் முன்பே நோன்புக் கஞ்சிக்கான அரிசியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications