உத்தரகாண்ட்டுக்கு செமினாருக்குப் போய் வெள்ளத்தில் சிக்கிய பேராசிரியர் மாயம்
சென்னை: உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி மாயமான தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியரும், சென்னையைச் சேர்ந்தவரும் அடக்கம். மற்ற 10 பேரும் விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள்.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பேராசிரியர் குமரேசன். இவர் காரைக்காலில் உள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த ஒரு செமினாரில் கலந்து கொள்வதற்காகப் போயிருந்தார். ஆனால் ஜூன் 16ம் தேதி முதல் இவரைக் காணவில்லை. இவரும் வெள்ளத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இவர் குறித்த ஒரு தகவலும் கிடைக்காததால் குடும்பத்தினர் பெரும் கவலையில் உள்ளனர்.
அதேபோல சென்னையைச் சேர்ந்த ஒருவரும் மாயமாகியுள்ளார். அவரைத் தேடும் முயற்சியில்தோல்வி ஏற்படவே அவரது மனைவி ரமா பெரும் சோகத்துடன் சென்னை திரும்பியுள்ளார்.தற்போது மாநில அரசின் உதவியை ரமா நாடியுள்ளார்.
இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் உத்தரகாண்ட்டில் காணாமல் போயுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மாநிலம் திரும்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications