பெண் எஸ்.ஐக்கு கல்யாண ஆசை காட்டி குடும்பமும் நடத்தி கைவிட்ட மாஜிஸ்திரேட் கைது
குன்னூர்: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட குன்னூர் மாஜிஸ்திரேட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் உமா மகேஸ்வரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட நீதிபதி, பல்லடம், குன்னூர் போலீஸ் துணை எஸ்பி ஆகியோரிடம் புகார் மனுக்கள் கொடுத்தார்.
அதில், வக்கீலாக பணியாற்றிய தங்கராஜ் என்பவர் என்னை காதலித்தார். என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். நானும் அதனை நம்பி அவரை காதலித்தேன். இந்த நிலையில் அவருக்கு மாஜிஸ்திரேட்டாக பதவி உயர்வு கிடைத்தது. தற்போது அவர் குன்னூரில் உள்ள கோர்ட்டில் பணியாற்றி வருகிறார்.
பதவி உயர்வு கிடைத்ததும் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை வேண்டுகிறேன் என்று தனது மனுவில் கூறியிருந்தார்.
மனு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மாஜிஸ்திரேட்டு தங்கராஜ் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருப்பது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று மாஜிஸ்திரேட்டு தங்கராஜை அவினாசி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடந்தது. பின்னர் தங்கராஜ் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் அவர் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை 2 வாரம் சிறையில் அடைக்க திருப்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து தங்கராஜ் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications