ராஜ்யசபா தேர்தலில் திமுகவை ஆதரித்திருந்தாலும் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

No alliance with Congress: Karunanidhi
சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளித்திருந்தாலும் அதனுடன் கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மாநிலங்களவைத் தேர்தலில் கனிமொழிக்கு காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆதரவு கேட்டுப் பெறப்பட்டதால், இலங்கைப் பிரச்சினையை திமுக மறந்துவிட்டதாக சிலர் சொல்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும், தேமுதிக, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளிடமும், பின்னர் காங்கிரஸ் கட்சியிடமும் ஆதரவு கேட்டது உண்மை தான்.

இதில் எந்தக் கட்சியிடமும் எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் மாநிலங்களவைத் தேர்தலையொட்டி மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், ஒரு சிலர் காங்கிரஸ் கட்சியோடு திமுக உறவு கொண்டுவிட்டது. இலங்கைப் பிரச்னையைக் கைகழுவிட்டது என்றெல்லாம் வெறுப்பு அரசியல் செய்கின்றனர் என்று கூறுகின்றனர்.

இலங்கைப் பிரச்சினை வேறு; மாநிலங்களவைத் தேர்தல் வேறு. கூட்டணி என்பது வேறு. அனைத்தையும் ஒன்றாக இணைத்து குழப்பம் விளைவித்துவிட சிலர் முயற்சிக்கின்றனர். மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த காரணத்தால் திமுகவைச் சேர்ந்த யாரும் மத்திய அரசில் சேர்ந்துவிடவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+