''பேசாம நிரந்தரமா தூக்கிருங்க.. 3 வேளை நல்லா சாப்ட்டுட்டுப் போறேன்...''
Subscribe to Oneindia Tamil

தேமுதிக தலைமையின் சஸ்பெண்ட் நடவடிக்கை குறித்து திட்டக்குடி எம்.எல்.ஏ தமிழழகன் கூறுகையில், தேமுதிகவினர்என்னுடைய கொடும்பாவியை கொளுத்தினார்கள். எனது திட்டக்குடி தொகுதியில் கூட்டம் போட்டு தடித்த வார்த்தைகளால் திட்டினார்கள்.
இத்தனைக்கு பிறகும் தேமுதிகவுக்கு எப்படி வாக்களிக்க கேட்டார்கள்? தற்காலிகமாக நீக்கியதன் மூலம் இப்போது ஒரு வேளை சாப்பிட கூடியவனாக மாறி உள்ளேன். நிரந்தரமாக நீக்கினால் 3 வேளை சாப்பிடுபவனாக மாறிவிடுவேன். எனவே என்னை நிரந்தரமாக நீக்கும் நல்ல முடிவை அவர் எடுக்க வேண்டும் என்றார் அவர்.
தேமுதிகவிலிருந்து முதலில் தாவிய இருவரில் இந்த தமிழழகன் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications