மழை வருகிறது, மக்களை வெளியேற்றுங்கள்: முன்கூட்டியே எச்சரித்த உத்தரகாண்ட் வானிலை மையம்
டேராடூன்: கனமழை பெய்யப் போவதாகவும், அதன் மூலம் வெள்ளம் உண்டாகலாம். எனவே உடனடியாக மக்களை வெளியேற்றுங்கள் என முன்கூட்டியே எச்சரித்ததாக உத்தரகாண்ட் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு உண்டானது. வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி ஆயிரக் கணக்கானோர் பலியானார்கள். மீட்புப் பணிகள் இன்னும் முடிந்த பாடில்லை.
இந்தப் பேரழிவினால், மக்களுக்கு இயற்கை மீது கோபம் உண்டானதைப் போல, உத்தரகாண்ட் வானிலை ஆய்வு மையம் மீதும் கோபம் உண்டானது. வானிலைமையம் முன்கூட்டியே எச்சரித்திருந்தால், முடிந்தவரை இந்த அழிவைக் குறைத்திருக்கலாம் என மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள உத்தரகாண்ட் வானிலை ஆய்வு மையம், ‘மழை பெய்வதற்கு முன்பே கனமழை பெய்யும் என்றும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பவும் கோரிக்கை விடுக்கபட்டது' எனத் தெரிவித்துள்ளது.
மேலும், ‘ ஜூன் 14ம் தேதி முதல் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தோம். மேலும், 15ம் தேதி கனமழை பெய்யும் என்றும் நிலச்சரிவு ஏற்படும் என்றும் மீண்டும் எச்சரிக்கை விடுத்தோம். மலை பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பவும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. மழையினால் ஷார் தாம் யாத்திரையை நான்கு நாட்கள் தடை செய்யவும் கூறினோம்' எனக் கூறியுள்ளார் அம்மாநில வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஆனந்த் குமார் ஷர்மா.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications