என்.எல்.சி. பங்கு விற்பனையை கண்டித்து நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்; ஜெ.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது: நெய்வேலி பழுப்பு நிலக்கரி மின் உற்பத்தி நிறுவனமான என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கும் பிரச்னை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 2004ஆம் ஆண்டும், 2006ஆம் ஆண்டு என்.எல்.சி.யின் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு எடுத்தபோதும், எனது கண்டனத்தை தெரிவித்தேன்.
தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த பிரச்னைக்கு, தமிழக அரசின் எதிர்ப்பை தெரிவித்ததோடு, 5 சதவீத பங்குகளை தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும், தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்றும் 25ஆம் தேதி கடிதம் எழுதினேன்.
ஆனால், இது குறித்து எவ்வித சாதகமான முடிவினையும் மத்திய அரசு இதுவரை எடுக்கவில்லை. இதற்கிடையில், என்.எல்.சி.யின் விற்பனை உறுதி என்று மத்திய நிலக்கரி துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
அதேபோல், இந்த பிரச்னை குறித்து முதலில் அறிக்கை விடுத்த தி.மு.க. தலைவர்
கருணாநிதி, கனிமொழிக்கு பதவி கிடைத்ததும் நிலக்கரியை மறந்துவிட்டார். இந்தப் பிரச்சினை குறித்து சாதகமான முடிவினை மத்திய அரசு தெரிவிக்காவிட்டால், அடுத்த மாதம் 3ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக என்.எல்.சி. தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, லாபத்தில் இயங்கும் என்.எல்.சி.யின் 5 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்திருக்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து ஜூலை 2ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களின் மத்திய அரசு அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications