அதெல்லாம் அந்தோனிதான் முடிவெடுப்பார்.. வாஸ்னிக் கருத்து

முகுல் வாஸ்னிக் நேற்று சென்னை வந்திருந்தார். இதனால் சத்தியமூர்த்தி பவன் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. அத்தனை கோஷ்டிகளைச் சேர்ந்தவர்களும் சத்தியமூர்த்தி பவனில் திரண்டிருந்தனர். வாஸ்னிக்கை சிறப்பாக வரவேற்றனர்.
பின்னர் பூட்டிய அறைக்குள் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார் வாஸ்னிக்.
பின்னர் மாநிலத் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் முன்னிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் வாஸ்னிக். அப்போது வாஸ்னிக் கூறுகையில், தற்போதைய சூழலில் தமிழக காங்கிரஸ் கட்சி நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவரையும் விரைவில் சந்தித்துப் பேச உள்ளேன்.
ஒன்றிய, நகர அளவிலும் நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளேன். அதன் பின் தமிழக அரசியல் சூழலுக்கேற்ப செயல்திட்டம் ஒன்று வகுக்க உள்ளோம். அந்தச் செயல்திட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் மேலிடம் உறுதுணையாக இருக்கும்.
ராஜ்யசபா தேர்தலில் திமுகவை ஆதரிக்கும் முடிவை, எல்லாத் தலைவர்களையும், எல்லாச் சூழ்நிலைகளையும் ஆலோசித்துதான் முடிவு எடுக்கப்பட்டது.
தேமுதிகவை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது என்பது அர்த்தமற்ற பேச்சாகும். உணவு பாதுகாப்பு மசோதா, நிலம் கையகப்படுத்தும் மசோதா போன்றவற்றை திமுகவை ஆதரிக்கும் என்று கூறியதன் காரணமாகத்தான் ராஜ்யசபா தேர்தலில் கனிமொழியை ஆதரித்தோம் என்று கூறுவதெல்லாம் பொய்யானவை.
காங்கிரஸ் என்பது அரசியல் இயக்கமாகும். அது வியாபாரம் எதுவும் செய்யவில்லை. மக்களவைத் தேர்தலில் 3-வது அணி நிச்சயம் அமையாது
தேர்தல் கூட்டணி தொடர்பாக நாங்கள் ஒன்றும் முடிவு எடுக்கவில்லை. மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோனி தலைமையில் தேர்தல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுதான் முடிவு செய்து அறிவிக்கும். எங்கள் கருத்துகளையும் அந்தக் குழுவுக்குத் தெரிவிப்போம் என்றார் வாஸ்னிக்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications