அஸ்ஸாம்: ஆட்டோ டிரைவர்களால் தாக்கப்பட்ட 16 வயது சிறுவன் பலி: ரூ.10க்காக தாக்குதல்?
திபு: அஸ்ஸாமில் ஆட்டோ கட்டணம் குறித்து ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர்கள் சேர்ந்து தாக்கியதில் 16 வயது சிறுவன் ஒருவர் பலியானார்.
அஸ்ஸாம் மாநிலம் கர்பி ஆங்லாங் மாவட்டம் திபுவைச் சேர்ந்தவர் ஹாரன் சாய்கியா. வழக்கறிஞர். அவரது மகன் ஜான்கர் சாய்கியா(16). அவர்கள் இருவரும் கடந்த மாதம் 25ம் தேதி ஆட்டோவில் சென்றுள்ளனர். கட்டணம் தொடர்பாக அவர்களுக்கும் ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்த இடத்தில் இருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் சேர்ந்து ஹாரனையும் அவரது மகனையும் அடித்து நொறுக்கினர். மேலும் இதை தடுக்க வந்த போலீசார் சிலரையும் தாக்கினர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த அப்பாவும், மகனும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குவாஹாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
அங்கு ஜான்கர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார். இதையடுத்து திபு மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் நேற்று நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் நடந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடமையை செய்யத் தவறியதற்காக ஒரு துணை எஸ்.ஐ. மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ரூ.10க்காக வாக்குவாதம் நடந்தது தாக்குதலில் முடிந்தது என்று கூறப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications