மனைவியின் நிர்வாணப் படம்… இணையத்தில் உலாவ விட்ட நபர் கைது
நாக்பூர்: சொந்த மனைவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து இணையதளத்தில் அப்லோட் செய்த நாக்பூர் தொழிலதிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாக்பூரில் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்துவருபவர் தர்மேந்திரா ஜெயின். இவருக்கும் இவருடைய மனைவிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக தர்மேந்திரா மீது போலீசில் புகார் அளித்துள்ளார் அவரது மனைவி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் மனைவிக்கு எதிராக விவாகரத்து வழக்கு பதிவு செய்துள்ளார் தர்மேந்திரா.
தாம்பத்ய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்த போது மனைவியை நிர்வாணமாக படம் எடுப்பாராம் தர்மேந்திரா. அதனை இப்போது இணையத்தில் அப்லோடு செய்து அதை வைத்து பணம் பார்த்துள்ளார்.
இதை தனியாக பிஸினசாகவே செய்து வருமானம் பார்த்து வரும் தர்மேந்திரா சொந்த மனைவியின் வீடியோ என்றும் நினைக்காமல் அப்லோடு செய்து பணம் சம்பாதித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தர்மேந்திராவின் மனைவி போலீசில் புகார் தெரிவித்தார். திருமணமாகி 20 ஆண்டுகாலமாக குடும்பம் நடத்திய தன் கணவர் தன்னுடைய படத்தையே இணையதளத்தில் போட்டு விற்பனை செய்ததை கண்டு போலீசில் புகார் தெரிவித்தார்.
அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்கள், துணை நடிகைகள் என பலரையும் நிர்வாண படம் எடுத்து அப்லோடு செய்து காசு பார்த்த தன் கணவர் மனைவி என்றும் நினைக்காமல் தன்னுடைய வீடியோவை அப்லோடு செய்தது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் தர்மேந்திராவின் மனைவி புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தர்மேந்திராவை கைது செய்ததோடு, அவருடைய நிறுவனத்திற்கும் சீல் வைத்தனர். தர்மேந்திராவின் லேப்டாப், போர்னோ வீடியோ கிளிப்பிங்ஸ், டிவிடி, போட்டோக்களையும் பறிமுதல் செய்தனர். இதில் பெரும்பாலானவை அவருடைய மனைவியின் நிர்வாண படமாகும்.
போலீசார் கைது செய்த உடன் நெஞ்சுவலிப்பதாக கூறிய ஜெயின், தற்போது நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications