சித்த மருத்துவமனை என்ற பெயரில் விபச்சாரம்.. அதிமுக மகளிர் அணி செயலாளர் கைது

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தில் சித்த மருத்துவமனை என்று பெயர் வைத்துக் கொண்டு பெண்களை வைத்து தொழில் செய்து வந்த அதிமுக மகளிர் அணிஒன்றிய செயலாளரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரோடு மேலும் 6 பேருக்கும் போலீஸார் காப்பு மாட்டினர்.

ஆர்.எஸ்.மங்கலம் காந்திவீதியை சேர்ந்தவர் முனியம்மாள். இவர் ஆர்.எஸ்.மங்கலம் அதிமுக மகளிர் அணி ஒன்றிய செயலாளாக இருக்கிறார். தனது வீட்டில் முத்துலெட்சுமி சித்த மருத்துவமனை என்ற பெயரில் ஒன்ற வைத்துள்ளார். இங்கு சிகிச்சையை விட கருக்கலைப்புதான் அதிகம் நடந்து வந்துள்ளது.

ஆனால் நாளுக்கு நாள் கருக்கலைப்பு செய்ய வருவோர் எண்ணிக்கை குறைந்தது. இதையடுத்து இதை விபச்சார விடுதியாக மாற்றி விட்டார் முனி. மேலும் இவருக்கு ஜீவிதா மேரி என்ற பெண் புரோக்கர் போல செயல்பட்டார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்துள்ளனர். மருத்துவமனையிலேயே இந்த அக்கிரமத்தை செய்து வந்தனர். இதுகுறித்துப் போலீஸாருக்குத் தகவல் போனது. இதையடுத்து போலீஸார் ரெய்டு நடத்தினர். அப்போது மருத்துவமனைக்கு 28 வயதான ஐஸ்வர்யா என்ற பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டதைக் கண்டு அவரை கையும் களவுமாக போலீஸார் பிடித்தனர். இவர் கேரளாவைச் சேர்ந்த அழகியாம்.

இதையடுத்து முனியம்மாள், ஜீவிதா மேரி, ஐஸ்வர்யா உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+