நிலக்கரியை மறந்தது நானா? அதிமுக அரசா?: கருணாநிதி கேள்வி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
என்.எல்.சி. பங்கு விற்பனை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கனிமொழிக்குப் பதவி கிடைத்ததும், நிலக்கரியை நான் (கருணாநிதி) மறந்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர் 10 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி, 2012 ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசும், மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் உடனடியாக நெய்வேலி நிர்வாகத்தோடு தொடர்பு கொண்டு பேசி, பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்று நான் கோரியிருந்தேன்.
ஆனால் இந்தப் பிரச்சனை தொடர்பாக சட்டப்பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, என்.எல்.சி. தொழிலாளர் போராட்டப் பிரச்னை தமிழக அரசின் அதிகார வரம்புக்குள் வருவது இல்லை என்று அரசின் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
நிலக்கரியை மறந்தது நானா? அதிமுக அரசா? கடந்த ஆண்டு மத்திய அரசின் சார்பில் என்.எல்.சி. பங்குகளை விற்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்ட நேரத்தில், இது தொழிலாளர்களை வம்புக்கு இழுக்கும் செயல். மத்திய அரசு மேலும் எதிர்ப்பைத் தேடிக்கொள்ள வேண்டாம் என்று எச்சரிப்பதாக அறிக்கை விடுத்திருந்தேன்.
மேலும் ஜூன் 26-ஆம் தேதி என்.எல்.சி. தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், பங்குகள் விற்பதைவிட மாற்று வழியை ஆராயுமாறு பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தையும் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் கனிமொழிக்காக நிலக்கரியை மறந்துவிட்டேன் என்று குற்றம்சாட்டி அறிக்கை விடுவது என்ன பெருந்தன்மை?
மத்திய நிறுவனத்தின் பங்குகளை மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் எனறு மத்திய அமைச்சர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை, தமிழக அரசிடம் கொடுக்கத் தயாராக உள்ளோம். கூடுதலாக 5 சதவீத பங்குகளைக்கூட கொடுக்கத் தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா என்.எல்.சி. பங்குகளைக் கோரி ஜூலை 2-ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
எனவே, ஜெயலலிதா அறிவித்துள்ள ஆர்ப்பாட்டம் நிலக்கரிக்காகவா, சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக சார்பில் ஜூலை 8-ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்காகவா அல்லது அதிமுகவின் ஆர்ப்பாட்டத்தால் தான் நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளை தமிழக அரசுக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்தது என்று சொல்வதற்காகவா என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications