உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு ஜெயலலிதா வாழ்த்து
சென்னை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள தமிழகத்தை சேர்ந்த நீதியரசர் சதாசிவத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது: தமிழகத்தைச் சேர்ந்த நீதியரசர் சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.
ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் பயின்று, பின்னர் சென்னை அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று அரசு வழக்கறிஞர், உயர் நீதிமன்ற நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதியரசர் என படிப்படியாக ஏற்றம் பெற்று இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் சதாசிவம்.
அவருக்கு தமிழக மக்களின் சார்பாகவும், என் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அவர் பணிக்காலத்தில் நீதித்துறைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்ற அவருக்கு என் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications