டாக்டர், இந்த கட்டுவிரியன் என்னைக் கடிச்சுட்டான்...

Subscribe to Oneindia Tamil

மதுரை: தன்னைக் கடித்த கட்டுவிரியன் பாம்பை மருத்துவமனைக்கு அழைத்து வந்து, மருத்துவர்களை அதிர்ச்சியில் மயக்கமடைய வைத்துள்ளார் மதுரைப் பெண் ஒருவர்.

மதுரை அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் 45 வயது பாண்டியம்மாள்-க்கு கணவர் இல்லை. வயல் வேலைகள் செய்து வருமானம் ஈட்டி வருகிறார்.

வழக்கம் போல், நேற்றுக் காலை வயலுக்குச் சென்ற பாண்டியம்மாளை, சுமார் 6 அடி நீள கட்டுவீரியன் பாம்பு ஒன்று கடித்துள்ளது. பாம்பு கடித்த வலியை பொறுத்துக் கொண்டு,அந்தப் பாம்பை எடுத்து சுழற்றி தரையில் அடித்து, அரைகுறை உயிராக்கி உள்ளார் அவர்.

பின் உடனடியாக அந்தப் பாம்பையும் தூக்கிக் கொண்டு தனக்கு வைத்தியம் பார்ப்பதற்காக மதுரை அரசு பொதுமருத்துவமனைக்கு சென்றுள்ளார். கையில் பாம்பை பிடித்துக் கொண்டு ஓடி வந்த பாண்டியம்மாளைப் பார்த்து அங்கிருந்தநோயாளிகளும், பணியாளர்களும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனராம்.

தான் கொண்கு வந்திருந்த பாம்பை, மருத்துவரின் மேஜையில் போட்டுவிட்டு, தனக்கு மருத்துவம் பார்க்குமாறு பாண்டியம்மாள் கூறியுள்ளார். பின்னர் தேவையான சிகிச்சை அளித்தமருத்துவர்கள், பாண்டியம்மாளின் உயிரை காப்பாற்றினர்.

பாம்பை பார்த்த அதிர்ச்சியில் இருந்த மருத்துவர்கள், ‘பாம்போ, நாயோ கடித்தால் அதனையும் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு வரத் தேவையில்லை' என நோயாளிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+