பேச்சழகியுடன் 'பழகிய' ரவீந்திரன், 'சைடில்' பழகிய அன்பு.. விடிய விடிய கட்டி அடித்த மக்கள்!!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே திருமணமான போலீஸ்காரர் ஒருவர், இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு படுக்கை அறை வரை போய் விட்டதால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் விடிய விடிய அந்தக் காவலரை கட்டி வைத்து அடித்து உதைத்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முத்துப்பேட்டை அருகே உள்ளது பெத்தவேளாண்கோட்டை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் 22 வயதான பேச்சழகி. இவர் ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு ஒரு காதலர் இருக்கிறார். அவரது பெயர் ரவீந்திரன். கல்லூரி படித்தபோதிலிருந்தே இருவரும் காதலித்து வந்துள்ளனர். ரவீந்திரன் தற்போது சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் பேச்சழகியின் கண் பார்வை அன்பு என்பவர் மீதும் விழுந்துள்ளது. அன்பு ஆயுதப் படை காவலர் ஆவார். அன்புக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். இருந்தாலும் பேச்சழகியின் பேச்சழகில் மயங்கி விழுந்த அவரால் எழுந்திருக்க முடியாமல் போனது. இது படுக்கை அறை வரைக்கும் போய் விட்டது.
இந்த மேட்டர் சென்னையிலிருந்தபடி பேச்சழகியை உருகி உருகி காதலித்த ரவீந்திரனுக்குத் தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் பேச்சழகியை நேரில் சந்தித்து நிஜமா என்று கேட்டுள்ளார். இல்லை இது பொய், சுத்த வதந்தி என்று தெனாவெட்டாக மறுத்துள்ளார் பேச்சழகி.
ஆனாலும் விடாத ரவீந்திரன், நேரடியாக அன்புவையே பார்த்து கேட்க, அவர் ஆமாம், உண்மைதான் என்று கூறி விட்டார். மேலும் சொல்வது உண்மைஎன்பதை நேரடியாக நிரூபிப்பதாகவும் கூறுகிறார்.
இதையடுத்து இருவரும் இரவில் பேச்சழகி வீட்டுக்குச் சென்றனர். வெளியில் ரவீந்திரன் மறைவிடத்தில் இருந்து கொண்டார். அன்பு வீட்டுக்குள் போனார். சிறிது நேரத்தில் அன்புவும், பேச்சழகியும் படுக்கையில் உல்லாசத்தைத் தொடங்குகின்றனர். இதையெல்லாம் வெளியில் நின்று வேடிக்கை பார்த்த ரவீந்திரன் கொதிப்படைந்தார்.
கடும் கோபத்துடன் கீழே கிடந்த கட்டையை எடுத்து வேகமாக பேச்சழகியை தாக்கினார். அடி தாங்க முடியாமல் பேச்சழகி அலறவே ஊர் மக்கள் திரண்டு வந்தனர். பேச்சழகியைத் தாக்கிய ரவீந்திரன், அவருடன் உல்லாசமாக இருந்த அன்பு ஆகிய இருவரையும் பிடித்து கட்டி வைத்தனர். பின்னர் தாறுமாறாக தாக்கியுள்ளனர். விடிய விடிய இந்த அடி உதை விழுந்துள்ளது.
இன்று காலை போலீஸாருக்குத் தகவல் தெரியவே அவர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர். பின்னர் ஊர் மக்கள் கொடுத்த புகாரின் பேரில் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications