For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா புறப்பட்டார் பசில் ராஜபக்சே.. 13வது திருத்தம் பற்றி மத்திய அரசுடன் பேச்சு!

By Mathi
Google Oneindia Tamil News

basil-heads-new-delhi
கொழும்பு: இலங்கை அரசியலமைப்பின் 13வது சட்டப்பிரிவில் திருத்தம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும் அமைச்சருமான பசில் ராஜபக்ச இன்று இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

ராஜிவ்- ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் படி இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் 13வது ஏ பிரிவில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கு கூடுதம் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஏற்கெனவே தனித்தனியாக பிரிக்கப்பட்டுவிட்டன. தற்போது வடக்கு மாகாண சபைக்கான அதிகாரத்தை குறைக்க இலங்கை அரசு முயற்சிக்கிறது.

இதற்கு இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவும் வடக்கு மாகாண சபை தேர்தல் முடியும்வரை 13வது திருத்தத்தில் திருத்தம் கூடாது என வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த பசில் ராஜபக்சே கொழும்பில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டுள்ளார். டெல்லி சென்றடையும் பசில் ராஜபக்சே வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

English summary
Sri Lanka Economic Affairs Minister Basil Rajapaksa left for New Delhi today for crucial talks with the Indian government, an official said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X